search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி சொத்து தகராறு"

    தேனி அருகே சொத்து தகராறில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பள்ளப்பட்டி முதல் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் குபேந்திரன் (வயது26). இவருக்கும் அவரது அண்ணன் அழகுராஜா என்பவருக்கும் பூர்வீக சொத்தை பிரிப்பதில் முன்வி ரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அழகுராஜா கத்தியால் குத்துவதுபோல வந்தார். அதை தடுக்க முயன்றபோது குபேந்திர னுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த குபேந்திரன் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

    கண்டமனூர் அருகில் உள்ள பொன்னம்மாள்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன்கள் சிவக்குமார் (40), முத்தையா (30). இதில் முத்தையா வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அவரது பெரியப்பா மகன் ஜெகன் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த சிவக்குமார் தனது தம்பி என்றும் பாராமல் முத்தையாவை இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தினார். இது குறித்து கண்டமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே சொத்து தகராறில் மூதாட்டியை தாக்கிய கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஒத்தப்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தாய் (வயது 65). இவரது மகன் ராமு (33), மகள் அன்னலெட்சுமி (40). இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    சின்னத்தாய் பெயரில் உள்ள சொத்துக்களை தங்களுக்கு எழுதி தர வேண்டும் என அவரது மகனும், மகளும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். ஆனால் சின்னத்தாய் தனக்கு பிறகுதான் சொத்துக்களை அனுபவிக்க முடியும் என கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராமு, அவரது மனைவி சுகன்யா, அன்னலெட்சுமி, அவரது கணவர் மகாதேவன் ஆகிய 4 பேரும் வந்து சொத்து கேட்டு தகராறு செய்தனர். மேலும் சின்னத்தாயை தாக்க முயன்றனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் (28) என்பவர் விலக்கி விட வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பாண்டீஸ்வரனை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    மேலும் சின்னத்தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டனர். படுகாயமடைந்த பாண்டீஸ்வரன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னத்தாய் கொடுத்த புகாரின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் மகாதேவனை கைது செய்து மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×